உணவில் உள்ள சத்துக்கள் வீணாவதற்கு என்ன காரணம் தெரியுமா??

0

நாம் என்ன தான் காய்கறிகளை உணவில் எடுத்துக் கொண்டாலும் அதை சமைக்கும் முறைகளை வைத்தே அந்த சத்துக்கள் நமது உடலில் சேருகிறது. ஒரு குறிப்பிட்ட உணவை இப்படி தான் சமைக்க வேண்டும் என்று உள்ளது. அப்பொழுது தான் அந்த முழு சத்துக்களையும் நம்மால் அடைய முடியும்.

உணவுகள் சமைக்கும் முறை??

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு பொருட்களில் அதன் சத்துகள் முழுவதும் நமது உடலில் சேருகிறதா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் நாம் உணவுகளை எந்த விதத்தில் சமைக்கிறோம் என்பதை பொருத்து தான் அதன் சத்துக்கள் நமக்கு சேருகிறதா?? இல்லையா என்பதை கணிக்க முடியும்.

cooking
cooking

ஏனெனில் நாம் இப்பொழுது துரித உணவுகளுக்கு அடிமையாகி உள்ளோம். எனவே என்ன தான் காய்கறிகள் சாப்பிட்டாலும் அதன் முழு சத்துக்கள் நமது உடலுக்கு சேருவது இல்லை.

  • சில உணவுகளை நாம் முழுவதுமாக வேக வைத்து சாப்பிடுவோம் அல்லது எண்ணெயில் பொரித்து சாப்பிடுவோம். முட்டையை நீரில் வேக வைத்து சாப்பிடும்போது தான் அதன் முழுமையான சத்துக்கள் நமது உடலில் சேருகின்றனர்.
  • கடைகளில் விற்கும் சிக்கன் கிரில். பார்பிகியூ போன்றவற்றை நாம் விரும்பி உண்கின்றோம். ஆனால் அதனை சுடும்போது அதிலிருந்து 40 சதவீத கொழுப்பு சத்துக்கள் வெளியேறுகிறது. இது உடலுக்கு எந்த சத்தையும் தராது. இதனால் புற்றுநோய்க்கு கூட வாய்ப்புள்ளது.
bbq
bbq
  • புரத சத்துகள் நிறைந்த மீன் அனைவர்க்கும் பிடித்தமான உணவு வகையாகும். ஆனால் அதனை குழம்பு வைத்து சாப்பிடும்போது தான் மீனின் முழு சத்துக்களும் நமக்கு கிடைக்கும். வறுத்த மீன்கள் நமது உடலுக்கு எந்த சத்துக்களையும் தருவதில்லை.
  • கடாயில் வறுக்கும் உணவுகள் அதாவது சிறிது எண்ணெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருந்தால் வெந்துவிடும். இதனால் சத்துக்கள் வெளியேறுவதில்லை.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

  • மைக்ரோவேவ் மூலம் சமைப்பதால் உணவுகளில் உள்ள சத்துக்கள் பாதுகாக்கப்படுகிறது. மேலும் பூண்டு மற்றும் காளான் போன்ற உணவு வகைகளில் உள்ள நோய் எதிர்ப்பு சத்துக்கள் முழுவதுமாக பாதுகாக்கப்படுகிறது.
  • மேலும் எண்ணையில் பொரித்து எடுக்கும் உணவுகளில் அனைத்து சத்துக்களும் வெளியேறுகிறது.
steaming foods
steaming foods
  • ஆவியில் வேக வைக்கும் உணவுகளான இட்லி, இடியப்பம் போன்றவைகளின் சத்துக்கள் வெளியேறுவதில்லை. இதனால் முழுமையான சத்துக்களை நமது உடல் பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here