தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் அனுமதி!!

1

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள காரணத்தால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக கட்சி தலைமையிடம் தெரிவித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்படுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை மாநிலம் முழுவதும் பிரச்சார பணிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 68 வயதான விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இருப்பினும் அவர் தற்போது பூரண உடல்நலத்துடன் இருப்பதாக கட்சி தலைமையிடம் அறிவிப்பில் கூறி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

10, 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு காரை பரிசளித்த அமைச்சர் – குவியும் பாராட்டுக்கள்!!

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், விஜயகாந்த் அவர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை வழக்கம் போல உடல்நல பரிசோதனைக்கு சென்ற பொழுது லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இதனால் அவர் உடனடியாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அது முழுவதுமாக சரி செய்யப்பட்டு பூரண உடல்நடத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேமுதிக தொண்டர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here