ப்ரோக்கோலியை வைத்து அருமையான பெப்பர் ப்ரை ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
Broccoli pepper fry
Broccoli pepper fry

ப்ரோக்கோலியை நம்மில் பலர் ஹோட்டலில் மட்டுமே பார்த்திருக்கிறோம். சிலருக்கு இதை சமைக்க தெரியாது. இப்பொழுது ப்ரோக்கோலியை வைத்து சுவையான பெப்பர் ப்ரை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ப்ரோக்கோலி – 2

பச்சைமிளகாய் – 2

வெங்காயம் – 2

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில்’ ப்ராக்கோலி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

Broccoli pepper fry
Broccoli pepper fry

அதன்பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். பிறகு நாம் தண்ணீர் ஊற்றி வேகவைத்த ப்ராக்கோலியை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன்பின் மிளகுத்தூளை சேர்க்கவும். 5 நிமிடங்கள் தொடர்ந்து வதக்கவும். இப்பொழுது கொத்தமல்லி தூவி இறக்கினால் ப்ராக்கோலி பெப்பர் ப்ரை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here