2வது வெற்றி பெறுமா பெங்களூரு அணி?? இன்று பஞ்சாப்புடன் மோதல்!!

0

ஐபிஎல் 2020 சீசனின் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வரை சென்று டெல்லியிடம் தோற்ற பஞ்சாப் அணி தனது முதல் வெற்றியை பெற இன்று முனைப்பு காட்டும். நடுவரின் தவறான தீர்ப்பால் வெற்றியை நழுவவிட்ட கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி இம்முறை சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்லை களமிறக்குவது சற்று கடினமே என்று கூறப்படுகிறது.

நட்சத்திர வீரர்கள்:

பெங்களூரு அணியை பொறுத்தவரை கேப்டன் விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், ஆரோன் பின்ச், தேவந்த் படிக்கல், சாஹல், நவதீப் சைனி என அசுர பலத்துடன் உள்ளது. பவுலிங்கில் சொதப்பி வந்த வீரர்கள் கடந்த போட்டியில் மீண்டும் பார்முக்கு வந்துள்ளது பெங்களூரு அணிக்கு மேலும் பலத்தை அதிகரித்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பஞ்சாப் அணியில் கேப்டன் கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால், மேக்ஸ்வெல், முகமது சமி, காட்ரல், நிகோலஸ் பூரான் என இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். இரு அணிகளும் பேட்டிங், பவுலிங் என சமபலத்துடன் இருப்பதால் இன்று போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஐபிஎல் தொடரில் இதுவரை 24 போட்டிகளில் நேருக்கு நேர் இரு அணிகளும் மோதி உள்ளன. அதில் பஞ்சாப் 12 முறையும், பெங்களூரு 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here