Saturday, May 18, 2024

மக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு இ பாஸ் முறை எளிமையாக்கப்படும் – முதல்வர் உரை!!

Must Read

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 8 புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டிய தமிழக முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

முதல்வர் ஆய்வு:

கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள் எவ்வாறு உள்ளது என்று ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அதில், தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 200 கோடிக்கும் மேற்பட்ட திட்டப்பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினர். மேலும், முடிவுற்ற 30 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 20 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

முதல்வர் உரை:

இந்த நிகழ்வுகள் முடிந்தது, முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார். பின், உரையாற்றிய முதல்வர் ” இன்று செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ளது. விவசாயிகள் மற்றும் கிராமப்புறமக்கள் பாதிக்காத வகையில் தான் இந்த திட்டங்கள் உள்ளது.

எம்எல்ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. மக்கள் அனைவரும் ஒத்துழைத்தால் நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பலாம். அரசு தகுந்த நடவடிக்கைகளை சிறப்பாக செய்து வருகிறது.

இனி தங்கத்தை மியூசியத்தில் தான் பார்க்கணும் போல – சவரன் 43 ஆயிரத்தை தாண்டிருச்சு!!

tamilnadu cm in corona activities
tamilnadu cm in corona activities

அதனால், தான் கொரோனா பாதித்தவர்கள் விரைவாக குணமடைகிறார்கள். கொரோனா பதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும். இ பாஸ் முறையால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகுவது தெரிகிறது. அதனால், அதனை எளிமையாக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -