Sunday, May 5, 2024

இறுதியாண்டு தேர்வுகளை நடத்த கட்டாயப்படுத்தும் யுஜிசி – மாணவர்கள் பதில்மனு!!

Must Read

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் 30க்குள் நடத்தும் முடிவைக் கைவிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் யு.ஜி.சி தெரிவித்துள்ளதற்கு மாணவர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல்.

யுஜிசின் உறுதியான முடிவு:

நாடு முழுவதும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவதற்கான யுஜிசி ன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. வியாழக்கிழமை விசாரணையின்போது, யுஜிசி இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்ய கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தது, செப்டம்பர் இறுதிக்குள் தேர்வுகளை நடத்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் கேட்டுக்கொண்டது.

மாணவர்கள் கேள்வி:

பல்கலைக்கழக மாணியக் குழு நேற்று முன் தினம் உச்ச நீதிமன்றத்தில் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று எழுத்து மூலம் பதிலளித்திருந்தது. அதற்கு மாணவர்கள் தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

college exams
college exams

அதில், கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, பல மாநிலங்களில் மழை பாதிப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கில் கொள்ளாமல் செப்டம்பர் மாதம் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று யு.ஜி.சி தொடர்ந்து பிடிவாதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மாணவர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

வேலைவாய்ப்பு வேண்டும்:

ஜூலை 31 வரை நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினால் விரைவாக ஒரு வேலை தேட வாய்ப்பாக அமையும். வேலை இழந்து நிற்கும் பல குடும்பங்களின் நிலமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

graduation
graduation

எனவே முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து தேர்வு முடிவுகளை தாமதமின்றி வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -