சில நாடுகளில் இளைஞர்களால் தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸ்:
200க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.உலக அளவில் 1 கோடியே 72 லட்சத்து 19 ஆயிரத்து 767 பேர் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.6,71,009 பேர் பலி யாகி உள்ளனர்.
இளைஞர்கள்தான் காரணம்:
அமெரிக்கா,பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் நோய்த் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இளைஞர்கள்தான் காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் பேட்டி:
கொரோனா பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வயதானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தாலும் அதே போலவே இளைஞர்களுக்கும் உண்டு.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இளைஞர்களுக்கு இதன் ஆபத்து குறித்து நம்பவைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. பல நாடுகளில் இளைஞர்கள் இன்னும் கொரோனாவின் ஆபத்தை உணராமல் பார்ட்டி போன்றவற்றிற்கு செல்கின்றனர்.

வடகிழக்கு நாட்டில் உள்ள இளைஞர்கள் மிகவும் சாதாரணமாக கொரோனாவை கையாள்கின்றனர்.அதனால்தான் அங்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. இளைஞர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படலாம் என்று முன்னரே எச்சரித்திருந்தோம். மீண்டும் எச்சரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.