மதுவுக்கு பதிலாக சானிடைசர் குடித்த 10 பேர் பலி – ஆந்திராவில் சோகம்!!

0

ஆந்திர மாநிலத்தில் மது வாங்க இயலாத காரணத்தால் போதைக்காக கிருமிநாசினி (சானிடைசர்) குடித்த 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சானிடைசர் சரக்கு:

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா ஊரடங்கால் அரசுக்கு வருமானம் கடுமையாக குறைந்து உள்ளது. இதனை சரி செய்ய மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் கூலித் தொழிலாளர்கள் போன்ற வருமானம் இல்லாத போதை ஆசாமிகள் சில விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே சிலர் போதைக்காக ஆல்கஹால் கலந்த சானிடைசர் குடித்து பலியாகி உள்ளனர். இது போன்றதொரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – முன்னாள் திமுக எம்எல்ஏ விடுதலை!!

அம்மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 10 நாட்களுக்கு மேலாக மதுக்கடைகள் பூட்டப்பட்டு உள்ளன. அருகில் உள்ள பகுதிகளிலும் மதுபானங்கள் விலை அதிகமாக விற்கப்படுவதால், கூலித் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் உள்ளிட்டவர்கள் அரசு சார்பில் வழங்கப்படும் சானிடைசர்களை போதைக்காக குடித்து அப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அதைப்போன்று குரிப்பெடு என்கிற இடத்தில சானிடைசர் குடித்த 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here