கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பேச்சு – இயக்குனர் வேலு பிரபாகரன் கைது!!

0
director velu prabhakaran
director velu prabhakaran

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக திரைப்பட இயக்குனர் ‘வேலு பிரபாகரன்’ கைது செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் வேலு பிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இயக்குனர் வேலு பிரபாகரன்

1989 ஆம் ஆண்டு திகில் படமான நாளைய மனிதன் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, அதன் தொடர்ச்சியாக 1990 ஆம் ஆண்டு அதிசய மனிதன் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு வேலு பிரபாகரன் ஓர் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.

பொறியியல் தரவரிசை பட்டியலில் அதிர்ச்சி – 2 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சிபெறவில்லை!!

பின்னர் ஆர். கே. செல்வமணியின் தயாரிப்பில் அசுரன் மற்றும் ராஜாளி ஆகிய இரண்டு அதிரடி படங்களை இயக்கினார். பின்னர் அதிரடி படங்களில் இவர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

நாத்திகர்:

வேலு பிரபாகரன் ஓர் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் என்ற பல பரிமானங்களைக் கொண்டவர். சர்ச்சைக்குரிய கருப்பொருள்களுக்காக இவர் அறியப்படுகிறார், பெரும்பாலும் நாத்திகம் மற்றும் புரட்சிகர செய்திகளை இவரது படங்களில் எடுத்துக்காட்டுகிறார்.

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பேச்சு:

இந்து கடவுள்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

karupar kottam channel must be banned
karupar kottam channel must be banned

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

கருப்பர் கூட்டம் என்ற பெயரில் செயல்படும் யூடியூப் சேனலில் இந்து மதக் கடவுள் முருகப் பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் ஆபாசமாக பேசி விடியோ வெளியிட்டுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 13 ஆம் தேதி புகாரளித்தனர்.

இந்நிலையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு ஆதரவாகவும் இந்து கடவுள்கள் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாகவும் கருத்து பரப்பியதாக இந்து மக்கள் கட்சி அளித்த புகாரையடுத்து திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரனை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here