Monday, May 6, 2024

செப்டெம்பரில் ஆப்பிள் 12 சீரிஸ் !!!

Must Read

ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பரில் அதன் அடுத்த வரிசை மொபைல் ஆன ஆப்பிள் சீரிஸ் 12 ஐ, நான்கு வெவ்வேறு தோற்றங்களில் வெளிவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் வயர் இல்லாமல் சார்ஜ் ஏற்றும் வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம்:

இஹாக்ட்டு எனப்படும் சீன நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆப்பிள் சீரிஸ் 12 உடைய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது. அதன் அடிப்படையில், ஐ போன் 12, 5.4 இன்ச் எனவும், ஐ போன் 12 ப்ரோ 6.1 இன்ச் எனவும், ஐ போன் 12 ப்ரோ மேக்ஸ் 6.7 இன்ச்ஸ் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க ⇏⇏ வீட்டிலிருந்து வேலை செய்வதற்க்கு இவ்ளோவா!!

ஐ போன் 12 மேக்ஸ் இன் அளவு இன்னும் கணிக்கப்படவில்லை. மேலும் இந்த மாதிரி கடந்த 11 வரிசையின் போலே இருக்கும் என கணிக்கப்படுகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை:

இந்த தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் சென்ற வருடம் இதே செப்டம்பர் மாதத்தில் தான் சீரிஸ் 11 ஐ போன்கள் வெளியிடப்பட்டன. அதனால் இந்த வருடமும் வெளியிடப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது

சிறப்பு அம்சங்கள்:

இந்த தொடர்ச்சியான போன்களின் வெளியீடு மூன்று வெவ்வேறு வடிவங்களில் நான்கு மாதிரிகளில் வரும் என நிறுவனம் முன்பே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 120 Hz ப்ரோமோஷன் திரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கேமெராக்களும் மேம்பபடுத்தப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக வெளிச்சம் குறைவாக உள்ள பகுதியில் சுலோ- மோஷன் அம்சம் மேம்படுத்தப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -