Monday, April 29, 2024

தனது சொந்த குழந்தையை விற்ற தந்தை – வறுமையால் அவலம்..!!

Must Read

கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் தன் சொந்த குழந்தையை காசுக்காக விற்றது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவால் பாதிப்பு:

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் அரசு முழு பொது முடக்கத்தை செயல்படுத்தி உள்ளது. இதனால் பலர் வேலை இழந்து உள்ளனர். பலர் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்று உள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு அடர்ந்த வனப்பகுதி கிராமத்தை சேர்ந்தவர், தீபக் பிரம்மா. இவர் ஓரு கூலி தொழிலாளி. இவர் பொது முடக்கத்திற்கு முன் குஜராத்தில் வேலை பார்த்து வந்து உள்ளார். தற்போது பொது முடக்கத்தால், தனது சொந்த கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

வழக்கு பதிவு:

இந்த நிலையில், இவரது குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இப்படி இருக்க இவரது மனைவி, தனது 2 வது பெண் குழந்தையை பெற்று உள்ளார். இதனால் குடும்பத்தில் செலவுகள் அதிகரித்ததால், தீபக் தனது குழந்தையை 45,000 ரூபாய்க்கு விற்று உள்ளார்.

இதனை கண்டு ஆவேசம் அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இவரது பெயரில் புகார் அளித்து உள்ளனர். குழந்தையை விற்றவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டனர். அந்த இரு பெண்கள் மற்றும் தீபக்கையும் கைது செய்து உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

RCB அபார வெற்றி.. டேவிட் வார்னரின் சாதனையை சமம் செய்த விராட் கோலி!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 46 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -