Saturday, April 20, 2024

கொரோனா பாதிப்பு செப்டம்பர் மாத நடுவில் சரிய தொடங்கும் – பொதுச் சுகாதார மையத்தின் இயக்குநர் தகவல்..!!

Must Read

இந்தியா போன்ற பரந்த தேசத்தில் அனைத்து மாநிலத்திலும் ஒரே மாதிரி தான் கொரோனா பரவல் இருக்கும் என்று சொல்ல முடியாது, அது மாறுபட்டு தான் இருக்கும் என்று பொதுச் சுகாதார மையத்தின் இயக்குநர் மருந்துவர் பேராசிரியர் ஜி.வி.எஸ். மூர்த்தி பேட்டி அளித்து உள்ளார்.

கொரோனா பரவல்:

உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. அதனால், அனைவரும் கூறுவது, அடுத்த மாதத்தில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்று பொதுவாக கூறுகின்றனர். ஆனால், அப்படி இல்லை, அது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்று கூறி உள்ளார், பேராசிரியர் ஜி.வி.எஸ். மூர்த்தி.

இன்றைய தலைப்பு செய்திகளின் சுருக்கம்..!!

corona spread
corona spread

அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது என்னவென்றால், ” ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனால், உச்சம் தொடும் காலம் மற்றும் தணியும் காலம் இவை இரண்டும் மாறுபடும்.”

மாநிலங்கள் வாரியாக:

மாநிலங்கள் வாரியாக அவர் கூறியிருப்பது ” டெல்லியில் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் உச்சம் பெரும், அதன் பின் சரியும். தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் செப்டம்பர் மாத நடுவில் உச்சம் தொடும், பின் சரிய தொடங்கும்.

‘கடத்தல் கும்பல் 12 மணி நேரத்தில் கைது’ போலீஸ்னா சும்மாவா!!

migrants
migrants

இந்த மூன்று மாநிலங்களுக்கு உள்ள ஒற்றுமை என்னவென்றால், தினமும் ஒரே அளவில் தான் மக்கள் பாதிக்கப்படுகின்றனர், அதனால் உச்சம் பெரும் அளவும் ஒரே மாதிரி தான் இருக்கும். அதே போல் ஜார்கண்ட், பீகார் மற்றும் உத்தரப்பிரதேஷ் போன்ற மாநிலங்களில் உச்சம் அடைய சில மாதங்கள் ஆகும், ஏனெனில் புலம் பெயர் தொழிலாளர்கள் சென்ற பின் தான் இந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இருந்தது.”

அரசு நடவடிக்கை:

இவர் மூலம் கூறியிருப்பது மக்கள் அனைவரும் சீரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் நோய் தோற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும். அரசும் தக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -