ரக்ஷா பந்தன் பரிசாக தண்ணீர் விநியோகத் திட்டம் – பிரதமர் மோடி!!

0

பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று, தண்ணீர் விநியோக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, மணிப்பூர் மாநிலப் பெண்களுக்கு அதனை ரக்ஷா பந்தன் பரிசாக அளித்துள்ளார்.

திட்டத்தின் பயன்கள்

இத்திட்டத்தின் மூலம் பெரிய நகரமான இம்பால் மற்றும் 1700 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கப்பெறும். மேலும் இத்திட்டம் அம்மக்களுக்கு வாழ்கை அளிப்பதுடன், ஒரு லட்சம் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்திட்டம் அப்பகுதி பஞ்சாயத்து மற்றும் அங்கு வாழும் மக்களின் உதவியுடன் அமைக்கப்பட்டதனால், பரவலாக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. இது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது மற்றும் அதன் கீழ் குழாய் பதிக்கும் பணிகள், கொரோனாவால் கூட நிறுத்தப்படாமல் நடந்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல் ஜீவன் மிஷன்

இவை மட்டுமில்லாமல் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் வெளியிட்டுள்ளார். வடகிழக்கு பகுதி கொரோனா மற்றும் வெள்ளம் போன்ற இரு இன்னல்களிகள் தவித்து வருகின்றது. இதற்கு மோடி ஆதரவாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். 1,42,749 வீடுகள் மற்றும் 1,185 வசிப்பிடங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் வண்ணம் ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்பதன் கீழ் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.

ஹர் கர் ஜல்

மேலும் இம்பால் என்ற பெரிய நகரப் பகுதி, 25 நகரங்கள், 16 மாவட்டத்தில் உள்ள 2,80,756 பேர் கொண்ட 1,731 கிராமப்புற குடும்பங்களுக்கு உதவும் வகையில் மணிப்பூர் தண்ணீர் விநியோகத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 2024 – ல் ‘ஹர் கர் ஜல்’ என்ற இலக்கை அடைவதற்காக அம்மாநில அரசால் எடுக்கப்பட்ட பெரும் முயற்சியாக இத்திட்டம் கருதப்படுகிறது. நியூ டெவெலப்மென்ட் பேங்கின் கடன் தொகையுடன் சேர்த்து, 3054.58 கோடி ருபாய் இத்திட்டத்தின் செலவினம் ஆகும். இத்திட்டத்திற்காக மணிப்பூர் முதலமைச்சர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here