கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் நலமுடன் உள்ளார்கள் – எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு..!

0
corona vaccine
corona vaccine

கொரோனா கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர்..!

உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் தற்பொழுது இதற்கான தீர்வாக பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கோவாக்ஸின் என்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

ஜேஇஇ தேர்வு எழுத 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும் – மத்திய அரசு தகவல்..!

கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சென்னை கட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 13 மருத்துமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இது குறித்து பேட்டியளித்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் எனவும் கொரோனா தடுப்பூசி கோவாக்சின் பரிசோதனை சுமார் 6 மாதம் வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here