Wednesday, May 1, 2024

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிசிஜி தடுப்பு மருந்து – முதியவர்களுக்கு வழங்க உத்தரவு..!!

Must Read

கொரோனா நோய் தொற்று முதியவர்களுக்கு அதிகமாக தாக்குவதால் அவர்களுக்கு தடுப்பு மருந்து அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

நோய்எதிர்ப்பு:

கொரோனா வைரசுக்கு எதிராக முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிசிஜி தடுப்பு மருந்து வழங்கவும் அதற்கான சோதனைகளை நடத்தவும் தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Health Minister Vijayabaskar
Health Minister Vijayabaskar

ஏற்கனவே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பிசிஐி தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வரும் நிலையில் , இதனை முதியவர்களுக்கும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இது உள்ளார்ந்த தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

முதியவர்களுக்கு நோய் அறிகுறிக்கான சதவீதம்:

முதியவர்கள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்த நோய், இருதயம் சார்ந்த நோய்கள் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை கொரோனா தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது ,அதனால் தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் நோய் விகிதமும் உயிரிழப்பு விகிதமும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஈரானில் சிக்கித் தவித்த 40 இந்திய மீனவர்கள் தமிழகம் வந்தடைந்தனர்..!

corona vaccine for old people
corona vaccine for old people

இந்த சோதனை முயற்சியை ஐ.சி.எம்.ஆர் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெகு விரைவில் தொடங்க உள்ளது . இதன்மூலம் முதியவர்களுக்கு கொரோன தோற்று ஏற்படுவது குறைக்கப்படும் என்றும் , மேலும் நோயின் வீரியம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -