Thursday, April 22, 2021

இந்தியாவின் 2வது கொரோனா தடுப்பூசி – மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடங்கியது..!

Must Read

இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனை தொடங்கி உள்ளது.

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொற்று பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கையும் 10 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒரே தீர்வு தடுப்பூசி ஒன்று தான் என்ற நிலைமை நிலவி வருகிறது. இந்தியாவில் இப்போது 2 தடுப்பூசிகள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியையும், ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைகோவ்-டி என்னும் தடுப்பூசியையும் உருவாக்கி உள்ளன.

ஈரானில் சிக்கித் தவித்த 40 இந்திய மீனவர்கள் தமிழகம் வந்தடைந்தனர்..!

இவ்விரு தடுப்பூசிகளையும் அந்தந்த நிறுவனத்தினர் விலங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்து உள்ளனர். இந்த சோதனைகளில் அந்த தடுப்பூசிகள் நம்பகமானவை, பாதுகாப்பானவை, நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை என்று நிரூபிக்கப்பட்டு விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பூசிகளை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தனது ஒப்புதலை வழங்கி விட்டதையடுத்து இதற்கான தீவிர நடவடிக்கையில் இரு நிறுவனங்களும் இறங்கி உள்ளன.

ஜைடஸ் கேடிலா நிறுவனம் அறிக்கை..!

இந்த நிலையில் ஜைடஸ் கேடிலா நிறுவனம் தனது தடுப்பூசியை 1000 பேருக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி சோதனை ஆமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறுகிறது.

மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் எலி, கினியா பன்றிகள், முயல்கள் போன்ற விலங்கு இனங்களில் இந்த தடுப்பூசி சோதித்து பார்க்கப்பட்டது. அதில் இந்த தடுப்பூசியால் உருவான நோய் எதிர்ப்புச்சக்தி கொரோனா வைரசை வீழ்த்தும் வலிமையை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தடுப்பூசியின் பாதுகாப்புத்திறன் வெளிப்பட்டள்ளது. தடுப்பூசியின் நச்சு இயல் ஆய்வுகளில் எந்தவொரு பாதுகாப்பு கவலையும் ஏற்படவில்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரைசாவிற்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் யார்?? வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ரைசா தற்போது தான் மேற்கொண்ட சரும டிரிட்மென்ட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து தற்போது அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -