பொதுவாக அத்தி பழத்தை அதிக சத்துக்கள் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்து கொள்ளும் படி மருத்துவர்கள் நமக்கு பரிந்துரைத்து வருவார்கள். அப்படி அதிக சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தை வைத்து நம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்;
- அத்திப்பழம் – 3
- தயிர் – 3 டீஸ்பூன்
- முட்டை வெள்ளைக்கரு – 1
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
செய்முறை விளக்கம்;
அத்திப்பழம் ஹேர் பேக் தயாரிப்பதற்கு நாம் வாங்கி வைத்துள்ள அத்திபழங்களை தோல் நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். இதோடு 1 முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து இதில் ஊற்றி கொள்ளவும். மேலும் இதில் 3 டீஸ்பூன் தயிரையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும்.
இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த ஹேர் பேக்கை நம் தலை முடியில் அப்ளை செய்து ஒரு 25 நிமிடங்களுக்கு பிறகு வாஷ் செய்து கொள்ளவும். நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த அத்திப்பழத்தை இப்படி ஹேர் பேக்காக செய்து அப்ளை செய்து வருவதன் மூலம் நம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.
—