உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தை குறித்து சோசியல் மீடியாவில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு 48:
விக்ரம் படத்தை தொடர்ந்து உலகநாயகன் இந்தியன் 2 படத்தில் மிக தீவிரமாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அஜித்தை வைத்து துணிவு படத்தை எடுத்த வினோத் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். இது ஒரு பக்கம் இருக்க, தயாரிப்பிலும் புகுந்து விளையாடி வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தையும் சிம்பு நடிக்கும் ஒரு படத்தையும், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில் சிம்பு நடிக்கும் படத்தின் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். சமீபத்தில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் இப்படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி பிரபலத்துக்கு ஏற்பட்ட விபத்து.., பல நாள் மறைத்து வைத்த சோகம்!!
அதாவது நடிகர் சிம்பு நடிக்கும் 48 வது படமான இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா நடித்து ரோலக்ஸ் கதாபாத்திரம் போன்ற மாஸான ரோலில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அறிந்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.