வேகப்பந்து வீச்சாளர்களை தேடும் மும்பை இந்தியன்ஸ்…, ஐடியா கொடுக்கும் ஆகாஷ் சோப்ரா!!

0
வேகப்பந்து வீச்சாளர்களை தேடும் மும்பை இந்தியன்ஸ்..., ஐடியா கொடுக்கும் ஆகாஷ் சோப்ரா!!
வேகப்பந்து வீச்சாளர்களை தேடும் மும்பை இந்தியன்ஸ்..., ஐடியா கொடுக்கும் ஆகாஷ் சோப்ரா!!

பும்ரா மற்றும் ஜே ரிச்சர்ட்சன் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதால், இவர்களுக்கு தகுந்த மாற்று வீரரை தேடும் பணியில் மும்பை இந்தியன்ஸ் அணி இறங்கி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, முதுகு வலி காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால், சில சர்வதேச போட்டிகளையும், எதிர்வரும் ஐபிஎல் தொடரையும் பும்ரா இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், ஐபிஎல்லில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவருக்கு தகுந்த மாற்று வீரரை கண்டுபிடிப்பது எளிதானது இல்லை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பும்ராவை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான, ஜே ரிச்சர்ட்சன் தொடை தசைநார் பிடிப்பு காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால், இவரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

லெஜண்ட்ஸ் லீக்: விக்கெட் இழப்பின்றி வென்ற இந்திய மஹாராஜாஸ்…, அதிரடி காட்டிய உத்தப்பா & கவுதம் கம்பீர்!!

இவரது இடத்தை நிரப்புவதற்கான மாற்று வீரரை குறித்து ஆகாஷ் சோப்ரா சிலரை பரிந்துரைத்துள்ளார். அவர் கூறியதாவது, சந்தீப் சர்மா, தவால் குல்கர்னி, அங்கித் ராஜ்பூத், பாசில் தம்பி, வருண் ஆரோன் உள்ளிட்டோரில் ஒருவரை மும்பை இந்தியன்ஸ் அணி, ஜே ரிச்சர்ட்சனுக்கு மாற்று வீரராக தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here