விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த சீசன் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலின் சீசன் 2 குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஏற்கனவே இந்த சீரியல் குறித்த ப்ரோம் இணையத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. அதில் ஹேமா, லட்சுமி இருவரும் வெவ்வேறு சூழ்நிலைகள் காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். மேலும் அதில் பாரதி, கண்ணம்மா குறித்த தகவலும் வெளிவரவில்லை.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர்களின் மங்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள் இது அமித் பார்கவ் மற்றும் காவியா அறிவுமணி தான் என்று கூறி வருகின்றனர். இதை வைத்து பார்க்கும் போது கூடிய விரைவில் இந்த சீரியல் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.