இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ ஆன்லைன் போட்டிகள் – பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்..!

0
ISRO
ISRO

பள்ளியில் பயிலும் மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) சார்பில் சைபர் ஸ்பேஸ் என்கிற போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

இஸ்ரோ போட்டிகள்:

இஸ்ரோ ஆன்லைன் வாயிலாக பள்ளி மாணவர்களின் திறமை மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளை நடத்தி வருகிறது. தற்போது 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு படம் வரைதல், 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரிகள் தயாரித்தல், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் விண்வெளி வினாடி வினா போட்டி இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நேபாள போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஒரு இந்தியர் பலி, இருவர் படுகாயம் – எல்லையில் பதற்றம்..!

டிஜிட்டல் ஊடுருவல் அதிகரிப்பு காரணமாக பங்கேற்பவர்கள் ‘டிஜிட்டல் இந்தியா’ என்கிற தலைப்பினை மையமாக வைத்து தங்களது திறமையை காண்பிக்க வேண்டும். இதில் பங்கேற்க, https://icc2020.isro.gov.in/icc/register.jsp, http://www.isro.gov.in, https://www.facebook.com/ISRO/, https://twitter.com/isro ஆகிய இணைய பக்கங்களிலும் அல்லது [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரியிலும் பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here