வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான அதிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
அதிதி சங்கர்
கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் திரைப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் ஆடல், பாடல் என அனைத்திலும் கலக்கியதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது சில பிரச்சினைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அதிதி அடிக்கடி பல போட்டோஷூட் களை நடத்தி வெளியிட்டு வருகிறார்.
போட்டோஷூட்களை தவிர்த்து பல ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இப்படி இருக்கையில் இப்போது கூட அதிதி, இந்திரஜா சங்கருடன் சேர்ந்து ‘சாமி சாமி’ என்ற பாடலுக்கு கலக்கலாக டான்ஸ் ஆடியுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகா ஆட்டத்தை விட உங்க ஆட்டம் மாஸாக இருக்கிறதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram