நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் ஏகே 63 படத்தை குறித்து இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார்:
கோலிவுட்டில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில், அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் தோன்ற இருக்கிறது. இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அஜித். இந்நிலையில் அஜித் நடிக்க இருக்கும் ஏகே 63 படம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது நடிகர் அஜித்தை வைத்து, பில்லா, ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை எடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்தின் சினிமா கேரியரில் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் என்றால் அது பில்லா தான்.
தயவு செஞ்சு எதுக்குமே ரொம்ப ஆடாதீங்க.., குமுறலுடன் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த த்ரிஷா!!
இதனால் விஷ்ணு இயக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினரிடம் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.