ட்விட்டரில் 90 சதவீத இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்., Gap விடாமல் ஆப்பு வைக்கும் எலான் மஸ்க்!!

0
ட்விட்டரில் 90 சதவீத இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்., Gap விடாமல் ஆப்பு வைக்கும் எலான் மஸ்க்!!
ட்விட்டரில் 90 சதவீத இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்., Gap விடாமல் ஆப்பு வைக்கும் எலான் மஸ்க்!!

ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை அண்மையில் வாங்கிய எலான் மஸ்க், நிறுவனத்தில் பணியாற்றிய 90 சதவீதத்திற்கு மேற்பட்ட இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிரடி காட்டி வருகிறார்.

எலான் மஸ்க் அதிரடி :

உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தை, தொழிலதிபர் எலான் மஸ்க் அண்மையில் கையகப்படுத்தினார். பதவியேற்ற அடுத்த நாளே ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், அமெரிக்க வாழ் இந்தியருமான பராக் அகர்வாலை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டு வருகிறார். இதுபோக கனடா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் ப்ளூ டிக் எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்போரிடம் கட்டணம் வசூல் செய்து வருகிறார். விரைவில் இந்தியாவிலும் இதனை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நேற்று அறிவித்தார்.

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ் – EPFO கொடுத்த சூப்பர் அறிவிப்பு! உங்களுக்கும் இந்த சேவை நிச்சயம்!!

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான இந்திய ஊழியர்களை மஸ்க் பதவி நீக்கம் செய்துள்ளார். தற்போதைக்கு 200க்கும் அதிகமான இந்திய ஊழியர்கள் மட்டுமே, இங்கு பணிபுரிந்து வருகின்றனர். உலக அளவில் இந்தோனேசியா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிபோனியா ஆகிய நாடுகளில் 3,200 க்கும் அதிகமான பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பியுள்ளார். தொடரும் இவரின் இந்த நடவடிக்கைகளால், பணியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here