இரண்டாவது திருமணத்திற்கு தயாரான தனுஷின் அண்ணியார்.., அவரே வெளியிட்ட பதிவு!!

0
இரண்டாவது திருமணத்திற்கு தயாரான தனுஷின் அண்ணியார்.., அவரே வெளியிட்ட பதிவு!!

நடிகை சோனியா அகர்வால் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி உள்ளதாக இணையத்தில் தகவல் வேகமாக பரவி வருகிறது.

இரண்டாம் திருமணம்:

பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனியா அகர்வால். அதாவது இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார். இவரது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். அதோடு முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதையும் தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து சோனியா அகர்வால் மீண்டும் செல்வராகவனின் சூப்பர் ஹிட் படங்களான ரெயின்போ காலனி, புதுக்கோட்டை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.இதையடுத்து இவருக்கும் இயக்குனர் செல்வராகவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது, பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மேலும் சில ஆண்டுகள் கழித்து இந்த தம்பதி விவாகரத்து செய்து கொண்டனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் சோனியா அகர்வால் , படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். சில ஆண்டுகள் கழித்து கிடைத்த சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இந்நிலையில் சோனியா அகர்வால் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று செம்ம வைரல் ஆகி உள்ளது. அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள், அவர் இரண்டாம் திருமணம் செய்கிறாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

இந்த கமென்டிற்கு சோனியா அகர்வால் ரிப்ளை செய்து உள்ளார். “எனது wedding மெஹந்தி இவ்வளவு சின்னதாக இருக்காது’ என பதில் கூறி இருக்கிறார். அதனால் இது அவரது திருமண மெஹந்தி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here