நகுலுக்கே டப் கொடுக்கும் அவரது மனைவி.., இவ்வளவு திறமையை எங்க ஒழிச்சு வச்சு இருந்தீங்க!!

0
நகுலுக்கே டப் கொடுக்கும் அவரது மனைவி.., இவ்வளவு திறமையை எங்க ஒழிச்சு வச்சு இருந்தீங்க!!

நடிகர் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த வீடியோ ஒன்றுக்கு, ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களை குவிந்த வண்ணம் உள்ளன.

வைரல் வீடியோ:

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இவர் பிரபல நடிகை தேவயாணியின் தம்பி என்பது நாம் அறிந்தவை.மேலும் பாய்ஸ் படத்தைத் தொடர்ந்து கதாநாயகனாக “காதலில் விழுந்தேன்” என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுமட்டுமின்றி நகுல் ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருந்து வந்தார். இவர் கடந்த 2016ம் ஆண்டு தனது காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். நகுல், எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

மேலும் நகுல் தனது மனைவி தண்ணீர் தொட்டியில் குழந்தை (வாட்டர் பர்த்) பெற்றுக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து நகுல் தன் குழந்தைகளுடன் சேர்ந்து செய்யும் குறும்புத்தனமான வீடியோக்களையும், தனது மனைவி பாடும் பாடல்கள் குறித்த வீடியோவை வெளியிட்டு வருவார். இந்த வகையில் தற்போது, நகுல் வெளியிட்ட ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sruti Nakul (@srubee)

அதாவது “உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு” என்ற பாடலை ஸ்ருதி பாஸ்கர் மற்றும் நகுல் பாடும் வீடியோ தான் அது. இந்த விடியோவை, ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். அந்த பதிவில்” தூக்கமே இல்லாத இரவுக்கும் சோர்வுடன் இருக்கும் பகல்களுக்கு நடுவில் எங்களுக்கு பிடித்த பாடலை பதிவு செய்திருக்கிறோம். அகிரா வீடியோவில் உட்காரவே மறுத்து விட்டான், இந்த வீடியோவை பதிவு செய்யும்போது கூட தொலைபேசியை கூட தள்ளி விட்டான். நாங்கள் பாடும் போது அமோர் பேசுவதை பின்னணியில் நீங்கள் கேட்கலாம்’ என்று நகுல் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here