தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் டோலிவுட்டில் சம்பாதித்த பெயர் புகழால் தமிழிலும் சுல்தான் என்ற படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து வெளிவந்த புஷ்பா திரைப்படம் இவரை பான் இந்தியா ஹீரோயின் என்ற பெயரை பெற்று தந்தது.
மேலும் பாலிவுட்டிலும் தன் கால்தடத்தை பதித்துள்ளார் ராஷ்மிகா. அங்கு முக்கிய நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் ஆகி வருகிறார். இவரை பற்றி நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் இவரின் குட்டி தங்கை இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்நிலையில் ராஷ்மிகா தன் தங்கை ஷிமம் மந்தனாவுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் ராஷ்மிகாவுக்கு இப்படி ஒரு தங்கை உள்ளாரா என வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.