நடிகர் அமீர் கான், நாக சைதன்யா ஆகியோர் நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் இன்று வெளியான நிலையில் அப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
சிக்குன்னு 2k காலத்து சிம்ரன் மாதிரி இருக்கீங்களே ஐஸ்வர்யா மேனன்.., பரிதவித்துப்போன இளவட்டங்கள்!!
லால் சிங் சத்தா:
இந்தி திரைப்படங்களில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர் தான் நடிகர் அமீர் கான். இவர் பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் ஆறு ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்ப் என்ற படம் அதிகாரப்பூர்வமாக லால் சிங் சத்தா என்ற பெயரில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அமீர்கான், கரீனா கபூர் மற்றும் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் நேற்று நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அதுமட்டுமின்றி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் தற்போது ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. இந்த திரைப்படம் இந்து மதத்தினருக்கு ஏதிராக இருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் #BoycottLaalSinghChaddha, #Flop ஆகிய ஹேஷ்டேக்குகள் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இத்திரைப்படம் ஒரு நாளில் 11 கோடிகளை மட்டுமே வசூலித்து உள்ளது. ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட் 180 கோடி என்பதால் முதல் நாள் வசூலால் படக்குழு சோகத்தில் உள்ளது. மறுபுறம் தெலுங்கு தாண்டி நாக சைதன்யா நடித்துள்ள முதல் ஹிந்தி படம் இது. இதன் மூலம் இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் சந்தித்துள்ள விமர்சனங்களால் இனி நாக சைதன்யா பாலிவுட்டில் நடிப்பது சற்று சிரமம் தான்.