சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்டர்’ மற்றும் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ஆகிய இரண்டுமே தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் தீபாவளிக்கு விஜயுடன் சிவகார்த்திகேயன் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் vs மாஸ்டர்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அது தள்ளிப்போனது. அதை நேரடியாக ஓடிடி இல் வெளியாகலாம் என தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு விஜய் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்பட்டது. இதனால் தீபாவளிக்கு மாஸ்டர் வெளியாக வாய்ப்பு உருவாகி உள்ளது.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை கிறிஸ்துமஸ் அல்லது தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. படத்தின் எடிட்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், வெளியீடு குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை என இயக்குனர் தெரிவித்து உள்ளார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ திரைப்படம் தோல்வி அடைந்த காரணத்தால் டாக்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |