நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் போட்டிக்கான அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரிதிவி ஷா, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2020 வெற்றியுடன் ஆரம்பம்
இலங்கை உடன் டி20 தொடர் வெற்றி மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி நல்ல பார்மில் உள்ளது. இது நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் நம்பிக்கையை அதிகரிக்கும்.
வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்
ஜனவரி 24ல் டி20 போட்டிகள் தொடக்கம்
நாளை மறுநாள் அதாவது ஜனவரி 24 அன்று இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே நியூஸிலாந்து சென்று அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு உள்ளது. காயம் காரணமாக ஷிகர் தவான் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.
டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்
ஊக்கமருந்து பிரச்சனை தடை முடிந்தது
இந்திய அணி வீரர் பிரிதிவி ஷா ஊக்கமருந்து சோதனையால் 6 மாதம் தடை விதிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். மீண்டும் தடை காலம் முடிந்ததும் பல போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்தார். இதனால் அவருக்கு இந்த தொடரின் ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |