தமிழ்நாட்டின் முதல் கோடீஸ்வரி ஆன மதுரை கௌசல்யா கார்த்திகா – கலர்ஸ் டிவி கோடீஸ்வரி நிகழ்ச்சி

0
Colors Tv Kodeeswari Rathika and Winner

தமிழ்நாட்டில் ரியாலிட்டி ஷோகளில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி. இந்த நிகழ்ச்சியானது பல திரையுலக நட்சத்திரங்களால் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. சூர்யா முதல் அரவிந்த் சாமி வரை இதனை தொகுத்து வழங்கியுள்ளனர்.

கலர்ஸ் டிவி கோடீஸ்வரி நிகழ்ச்சி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலர்ஸ் டிவி கோடீஸ்வரி நிகழ்ச்சியை பெண்களுக்காகவே தொடங்கி நடிகை ராதிகா அவர்களால் தொகுத்து வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்

கலர்ஸ் டிவி கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த 31 வயதான கௌசல்யா கார்த்திகா கலந்து கொண்டு ரூ. 1 கோடி பரிசை வென்றுள்ளார். மேலும் இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வாய் பேச மற்றும் காது கேள இயலாதவர்.
இவர் மதுரையில் மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றி வருகிறார்.

Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

ஒரு கோடி மதிப்புள்ள கேள்வி

இறுதி சுற்றில் 1948ம் ஆண்டு வெளியான எந்த நாவலில், இரண்டாம் புலிகேசியின் கற்பனை சகோதரரான நாகநந்தி குறித்து தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தரப்பட்ட ஆப்சனில் பார்த்திபன் கனவு, வேங்கையின் மைந்தன், சிவகாமியின் சபதம் மற்றும் யுவன ராணி தரப்பட்டது. ஆப்சன் சியில் இடம் பெற்றிருந்த சிவகாமியின் சபதத்தை தேர்வு செய்து ஒரு கோடியை வென்றுள்ளார் கௌசல்யா கார்த்திகா.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்

வெற்றி குறித்து கூறிய அவர், என்னுடைய வாழ்நாளில் நான் ஒவ்வொன்றிற்கும் என்னுடைய உறவினர்கள் மற்றும் பெற்றோர்களையே சார்ந்திருந்தேன். ஆனால் நான் எதை செய்கின்றோனோ அதனை நன்றாக கற்று, அதில் சிறந்த விளங்க விரும்பினேன். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பினை வழங்கிய கலர்ஸ் டிவிக்கு நன்றி என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here