சென்னை ஏர்போர்ட்டில் 5 திரையரங்குகள் – இனி போர் அடிக்காது!!

0
Chennai Airport

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் PVR சினிமாஸ் 5 திரையரங்குகளை அமைக்க உள்ளது. இதனால் விமானம் தாமதமானவர்களுக்கும், விமானத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தங்களது காத்திருக்கும் நேரத்தில் சினிமா பார்த்து பொழுது போக்கலாம்.

தற்போது சென்னை விமான நிலையத்தில் பல அடுக்குகளில் பார்க்கிங் வசதி கட்டப்பட்டுள்ளது. இதனுடன் சேர்ந்து 5 சினிமா தியேட்டர்களும் கட்டப்பட உள்ளன. இனி பல மணி நேரம் வெட்டியாக காத்திருந்து உக்காராமல் சினிமா பார்த்து பொழுது போக்கலாம். 5 திரை அரங்குகளும் ஒவ்வொன்றிலும் சுமார் 1000 பேர் அமரும் அளவில் கட்டப்படவுள்ளன.


இதற்காக PVR சினிமாஸ் ஒலிம்பியா நிறுவனத்துடன் ரூ. 250 கோடி ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனுடன் உணவகங்கள் மற்றும் குளிர்பானக் கடைகளும் இடம்பெற உள்ளன. இந்த திட்டம் 2021 க்குள் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here