பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சமீபத்தில் இத்தொடரில் இருந்து வெளியேறினார். இவர் ஏன் வெளியேறினார் என தெளிவான காரணம் வெளியாகவில்லை. இருப்பினும் அவருக்கு கிடைத்த சினிமா வாய்ப்புகளால் தான் இவர் வெளியேறியதாக கூறப்படுகிறது.
புதிய கண்ணம்மாவாக மேக்னா நடிப்பார் என்று தகவல்கள் பரவியது. ஆனால் மேக்னா இதில் நடிக்கவில்லை என்பது தற்போது உறுதி ஆகியுள்ளது. அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் நடிக்க உள்ளாராம். இவர் ஆள் பார்ப்பதற்கும் கிட்டத்தட்ட ரோஷினியின் ஜாடையில் ஒத்து வருகிறார்.
வினுஷா மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரைக்கு குதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளாராம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்