இவர்களுக்கும் விருது கொடுக்கலாமே?? தாதாசாகெப் பால்கே விருது குறித்து வைரமுத்து கருத்து!!

0

நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்ட  தாதாசாகெப் பால்கே விருதுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, இந்த விருது குறித்த முக்கிய கோரிக்கை ஒன்றையும் அரசுக்கு வைத்துள்ளார்.

கோரிக்கை வைத்த வைரமுத்து:

தமிழ் திரை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் ரஜினிகாந்த்.  இவரது கலை சேவையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு  தாதாசாகெப் பால்கே விருது வழங்கி பெருமைப்படுத்தியது.  இந்த விருதை பெற்றுள்ள ரஜினிகாந்திற்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், இவர் மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.   அதாவது இந்த விருதுக்கு தகுதியான நபர்கள் தமிழகத்தில் இன்னும் நிறைய பேர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  அதாவது, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாரதி ராஜா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட அனைவருக்கும் விருதுக்கு உரியவர்கள் தான் எனவும் தெரிவித்துள்ளார்.  எனவே, அவர்களுக்கு இந்த விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here