பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெனிபர் தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி ஜெனிபர்
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாக்கியா மற்றும் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கோபியிடம் யார் முதலில் சிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருந்து வருகிறது.
பாக்கியா எந்த அளவிற்கு அப்பாவித்தனமான கதாபாத்திரமோ அந்த அளவிற்கு போல்ட்டான கதாபாத்திரம் தான் ராதிகா. ராதிகா கோபியின் பழைய காதலி என்பதால் அவருக்கு பார்த்து பார்த்து செய்கிறார். தன் குடும்பத்திற்கு கூட இந்த அளவிற்கு செய்திருக்க மாட்டார்.
இது எழிலுக்கு தெரியவர இதனால் பெரிய பிரச்சனையே ஏற்படுகிறது. எழிலிடம் இது மாதிரி செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டு மறுபடியும் ராதிகா வீட்டிற்கு தான் சென்றார்.
இந்நிலையில் எப்பொழுதுமே இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜெனிபர் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.