அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க இந்திய கூட்டம்…! இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து தகவல் !!!

0

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க-இந்திய நல்லுறவை பேணி காக்கும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த முக்கிய கூட்டத்தில் அமெரிக்காவின் இந்திய தூதரான  தரன்ஜித் சிங் சாந்து பங்கேற்றார். மேலும் இந்த கூட்டத்தில் இரு நாட்டை சார்ந்த முக்கிய தலைவர்களும்  பங்கேற்றனர்.

ஜோ பைடன் அமெரிக்கா அதிபரான பிறகு இந்தியா சார்பாக கலந்து கொள்ளும் முக்கிய அதிகாரி தரன்ஜித் சிங் சாந்து ஆவார். பிரியா தான்யா என்ற இந்தியர் இந்த ஆண்டிற்கான வெள்ளை மாளிகையின் இந்தியர் என்ற கவுரவத்தை பெற்றுள்ளார். மேலும் இந்த கூட்டம் பற்றி தரன்ஜித் சிங் சாந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்து உள்ளார்.

அதாவது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,  இந்த கூட்டம் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் உள்ள எய்சன்ஹவர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இது மிக மகிழ்வான கலந்துரையாடலாக நடைபெற்றது எனவும் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் சுகாதாரத்துறை, கனிமவளத்துறை, சுற்றுச்சூழல் துறை, ஐடி தொழில்நுட்ப, கல்வித்துறை போன்ற பல துறைகள் குறித்து  விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here