67 வயது மனிதரின் வயிற்றில் 59 அடி நீள புழு – அதிர்ந்து போன மருத்துவர்கள்!!

0

தாய்லாந்தை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவருக்கு வித்தியாசமான நோய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் தாக்கிய முதல் மனிதர் இவர் தான் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நோயினை பற்றி அறிந்தவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

புழுக்கள்

மனித உடலில் பல கோடி புழுக்கள் இருந்து வருகின்றன. ஒரு சில புழுக்கள் மூலமாக நமது உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. ஆனால், இதில் சில வகை புழுக்கள் நமது உடலில் பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடும் என்று கூட கூறலாம். தீங்கினை ஏற்படுத்தும் புழுக்களானது நாம் உண்ணும் உணவுகளில் இருந்து கூட நமது உடலில் பாதிப்பினை ஏற்படுத்தும். அப்படி தாய்லாந்தினை சேர்ந்த ஒரு நபருக்கு வித்தியாசமான நோய் ஒன்று நாடாப்புழுக்கள் மூலமாக ஏற்பட்டுள்ளது.

‘என்ன ஷெரின் பட்டுனு சட்டைய கழட்டிட்டீங்க’ – வைரலாகும் வீடியோ!!

தாய்லாந்தினை சேர்ந்த ஒரு 67 வயது முதியவருக்கு பல நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கான தெரியாத அவர் சாதாரணமான வயிற்று வலி தான் என்று நினைத்து இதற்கு சரியாக மருத்துவம் பார்க்காமல் விட்டுள்ளார். ஆனால், நாட்கள் ஆக ஆக அவரது வயிற்று வலி அதிகமாகி உள்ளது. இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார்.

அதில் அவருக்கு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், அவரது சிறுகுடலில் 59 அடி நீளமுள்ள ஒரு நாடாப்புழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தான். இந்த நாடாப்புழுக்கள் மூலமாக தான் இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்த நாடாப்புழுக்களை மருத்துவர்கள் “மாட்டிறைச்சி நாடாப்புழு” என்றே கூறுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு காரணம், இந்த புழுக்கள் மாட்டிறைச்சியினை அதிகமாக உட்கொள்ளுவது மூலமாக மனிதர்களின் உடலுக்குள் நுழைய கூடும் என்று கூறப்படுகிறது. இவரது உடலில் இந்த நாடாப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டவுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து அந்த நாடாப்புழுவினை அகற்றியுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட மிக பெரிய நாடாப்புழு இது தான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here