மீண்டும் இயக்குனர் முத்தையாவுடன் மீண்டும் கை கோர்க்கும் கார்த்தி – கொம்பன் பார்ட் 2 வா??

0
karthi

நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தில் இயக்குனர் முத்தையாவுடன் ஜோடி சேர உள்ளாராம். பலத்த முன்னேற்பாடுகளுடன் ஆரம்பிக்கவுள்ள இத்திரைப்படம் கொம்பன் படத்தின் பார்ட் 2 என பேசப்பட்டு வருகிறது.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் சாக்லெட் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது அதிரடி நாயகனாக இருந்து வருகிறார். சினிமாவில் துணை இயக்குனராக வேலை பார்த்து வந்த நடிகர் கார்த்தி ‘பருத்திவீரன்’ திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே பல விருதுகளை பெற்ற நடிகர் கார்த்தி தொடர்ந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா’ ,’சிறுத்தை’ போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்து பாராட்டுகளையும் பெற்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வாரிசு நடிகராக இருந்தாலும் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளவர் கார்த்தி. முன்னதாக கார்த்தி நடிப்பில் உருவான ‘சுல்தான்’ திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவுக்கு தங்கச்சி பொறந்துருக்கா?? வைரலாகும் வீடியோ!!

இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படத்திற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இயக்குனர் முத்தையாவுடன் இரண்டாவது முறையாக இணையவுள்ளாராம் கார்த்தி. இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இந்த திரைப்படத்தில் லட்சுமி மேனன், தம்பி ராமைய்யா போன்றோர் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக ‘கொம்பன்’ திரைப்படத்தில் இந்த ஜோடி இணைந்து பணியாற்றியது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் கொம்பன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வந்தது. இந்நிலையில் கார்த்தி, முத்தையாவுடன் சேருகிறார் என்றதும் அது கொம்பன் பார்ட் 2வாக இருக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here