‘என்ன ஷெரின் பட்டுனு சட்டைய கழட்டிட்டீங்க’ – வைரலாகும் வீடியோ!!

0

பிக் பாஸ் மூலமாக புகழ் அடைந்த நடிகை ஷெரின் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த ரீல்ஸ் தற்போது வைரலாகி வருகின்றது. ரசிகர்களும் அந்த ரீல்சிற்கு லைக் செய்து வருகின்றனர்.

நடிகை ஷெரின்

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர் தான் நடிகை ஷெரின். இவர் முதன் முதலாக கன்னட திரைப்படமான “துருவா” என்ற படத்தில் தான் நடித்தார். கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டே ஷெரின் தமிழ் சினிமா துறையில் நடிக்க கவனம் செலுத்தினார்.

‘இன்னும் 6 நாள் தான் இருக்கு சீக்கிரமா பண்ணுங்க’ – ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு!!

இதனை அடுத்து அவர் முதன் முதலாக தமிழில் நடிகர் தனுஷுடன் “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தில் நடித்தார். இதன் மூலமாக இவர் ரசிகர்கள் மனதில் வெகுவாகவே இடம் பிடித்து விட்டார். இந்த திரைப்படத்திற்கு பின்பாக இவர் “விசில்” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அந்த திரைப்படத்தில் இவர் ஆரம்பம் முதல் நல்ல பெண்ணாக நடித்து விட்டு கடைசியில் இவர் பயங்கரமான வில்லியாக உருவெடுத்திருப்பார். இதனால் அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. இப்படியாக இருக்க இவர் சில ஆண்டுகளில் போதுமான படவாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார்.

அவ்வப்போது சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை அடுத்து இவர் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆரம்பத்தில் சரிவர விளையாடாத ஷெரின் அதன் பின்பாக மிகவும் கடுமையான போட்டியாளராக மாறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்போதுமே தனது சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்று செய்துள்ளார். பல நாட்களுக்கு பிறகு ரீல்ஸ் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அனைவரும் செய்யும் ரீல்ஸ் வடிவமைப்பில் தான் அவர் ரீல்ஸ் செய்துள்ளார். முதலில், சாதாரண உடையில் இருக்கும் ஷெரின் சட்டென்று அழகான ஒரு லெஹங்காவிற்கு மாறுகிறார். இதனை அடுத்து அந்த ரீல்ஸ் ட்ரெண்டாகி வருகின்றது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here