‘இன்னும் 6 நாள் தான் இருக்கு சீக்கிரமா பண்ணுங்க’ – ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு!!

0

இந்திய அரசு வருகிற 31ம் தேதிக்குள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று தெரிவித்தது. இல்லையெனில் பான் கார்ட் ரத்து செய்யப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

ஆதார் மற்றும் பான் இணைப்பு:

இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்வதற்கு இந்திய அரசு ஆதார் கார்டு திட்டத்தை கொண்டு வந்தது. மேலும் இந்த ஆதார் கார்டை அனைத்திற்கும் பயன்படும் வகையில் பல திட்டங்களை அமல்படுத்தியது. ஆதார் கார்டு இல்லையெனில் நம்மால் ஒரு சிம் கூட வாங்க முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவில் பல திட்டங்களை அமல்படுத்தியது. மேலும் கருப்பு பணத்தை குறைப்பதற்கும் வங்கி செயல்பாடை கவனிப்பதற்கும் பான் கார்டு அறிமுகப்படுத்தப்பது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் மினி ஊரடங்கு?? சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!!

இதன்மூலம் ஒருவரின் கணக்கில் அதிகமாக பணம் பரிவர்த்தனை நடந்தால் அதனை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துவிடுவர். முதலில் பான் கார்டை பயனாளர்கள் எடுக்கும் பொழுது அதற்கு ஆதார் தகவல் கேட்கவில்லை. தற்போது இதனை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதற்கு வருகிற 31ம் தேதி வரை தான் காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தவறினால் பான் கார்டு ரத்து செய்யப்படும். மேலும் ரூ.10,000 வரை அபராதமும் விதிக்கப்படும். இதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளது. தற்போது அதனை மிக எளிமையாக நாம் இணைத்துவிடலாம்.

எளிமையான வழிமுறைகள்:

  • பயனாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட போன் நம்பரில் இருந்து 567678 என எண் அல்லது 56161 என எண்ணிற்கு தங்களது பான் மற்றும் ஆதார் கார்டின் நம்பரை எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும் அதுவாகவே இணைந்துவிடும்.
  • மேலும் இணையதளம் மூலம் http://incometaxindiafiling.gov.in/ என தளத்திற்கு சென்று அங்குள்ள ஆதார் இணைப்பு என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் உங்கள் ஆதார் மற்றும் பான் நம்பரை பதிவு செய்து பின் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பிழை இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். பின்பு அங்குள்ள captcha பதிவு செய்து அதற்கு பின்பு பதிவு செய்யப்பட்ட போன் நம்பருக்கு வரும் ஒடிபியை அதில் பதிவு செய்யவேண்டும். பின்பு ஆதார் மற்றும் பான் இணைந்துவிடும்.
  • இதனை செய்ய இயலாதவர்கள் இசேவை மையத்திற்கு சென்று Annexure-i என்ற பார்மை வாங்கி அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவி செய்து அதனை மையத்தில் கொடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here