பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை – சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்!!

0

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக 235 துணை ராணுவப்படையினர் தமிழகம் வரவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் மக்களிடமிருந்து வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அதிமுக கட்சியின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளாக வீட்டுக்கு ஒரு வாஷிங்மெஷின் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேசிய விருது பெற்ற பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்து – வைரலாகும் ட்வீட்ஸ்!!

கமல்ஹாசனின் மநீம கட்சியின் சார்பில், வீட்டிலிருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு மாத சம்பளம், வீட்டுக்கொரு மடிக்கணினி போன்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாஜக கட்சியின் சார்பில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். முன்னதாக தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக துணை ராணுவப்படையினர் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் மீண்டுமாக 235 துணை ராணுவப்படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here