கோலாகலமாக தொடங்கும் 20 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா.., வெளியான முக்கிய அப்டேட்!!

0
கோலாகலமாக தொடங்கும் 20 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா.., வெளியான முக்கிய அப்டேட்!!
கோலாகலமாக தொடங்கும் 20 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா.., வெளியான முக்கிய அப்டேட்!!

இந்த வருடம் நடக்க இருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா தேதி குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா:

சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கத்தில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் எல்லா நாடுகளில் வெளியாகி ஹிட் அடித்த படங்களை சென்னையில் உள்ள தியேட்டரில் திரையிடுவது எல்லோருக்கும் தெரிந்ததே.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுவரை 19 ஆண்டுகள் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடி வந்த நிலையில், இந்த ஆண்டில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா தேதி குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் நடக்க இருக்கும் 20th சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 தேதி முதல் டிசம்பர் 22 வரை நடைபெறவுள்ளது.

பிக் பாஸ் விக்ரமனின் காதலி எதிர்நீச்சல் சீரியல் நடிகையா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

இந்த நிகழ்ச்சியில் 48 நாடுகளில் வெளியான தலைசிறந்த 107 படங்கள் தியேட்டரில் திரையிட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவில் வெற்றி பெற்ற படங்களுக்கு அரசாங்கத்தால் விருதுகள் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்த சர்வதேச திரைப்பட விழா கடந்த 2003ல் இருந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் எந்த நடிகரோட படம் திரையிட போகிறார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here