2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் குறித்த முக்கிய அப்டேட்…, கேப்டனை மாற்றி அதிரடி முடிவு எடுத்த அணி நிர்வாகம்!!

0
2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் குறித்த முக்கிய அப்டேட்..., கேப்டனை மாற்றி அதிரடி முடிவு எடுத்த அணி நிர்வாகம்!!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் கேப்டனாக தவானை, அணி நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் அப்டேட்:

இந்தியாவின் உள்ளூர் தொடரான ஐபிஎல் லீக்கில் நடப்பு ஆண்டில், முதன் முதலாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பட்டத்தை வென்று அசத்தி இருந்தது. இதையடுத்து, அடுத்த ஆண்டு(2023) நடைபெற இருக்கும், ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளின் உரிமையாளர்களும் தங்களது அணியை வலுவாக கட்டமைக்க தீவிரமாக இறங்கியுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த வகையில், கடந்த ஆண்டு மயங்க் அகர்வால் தலைமையின் கீழ் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் லெவன் 14 புள்ளிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது. இதன் விளைவால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகிகள் கூட்டத்தில், கேப்டனை மாற்றுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்றது.

புரோ கபடி 2022: பெங்கால் வாரியர்ஸுக்கு எதிராக சமன் செய்த தமிழ் தலைவாஸ்…, நரேந்தரின் அசத்தல் வேட்டை!!

இந்த ஆலோசனையின் முடிவில் இந்திய அணியின் ஒருநாள் தொடரின் கேப்டனாக வலம் வரும் ஷிகர் தவானை, பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் கேப்டனாக, அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர் தலைமையின் கீழ், இந்திய அணி பல ஒருநாள் தொடர்களை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அடுத்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here