
புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிந்த நிலையில், நரேந்தர் மற்றும் மனிந்தர் சிங் அபாரமாக விளையாடி புள்ளிகளை குவித்துள்ளனர்.
புரோ கபடி 2022:
இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரின் முதல் சுற்றுகள் பெங்களுரில் முடிந்த நிலையில், தற்போது 2 வது சுற்றுகள் புனேவில் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடியதால் 41 – 41 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் முடிந்தது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதில், பெங்கால் வாரியர்ஸின் மனிந்தர் சிங் 15 ரைட்களில் 19 புள்ளிகளை பெற்று அசத்தி உள்ளார். இவரை போல, தமிழ் தலைவாஸின் நரேந்தர் 12 ரைட்களில் 15 புள்ளிகளை பெற்றுள்ளார். இதன் மூலம், இந்த லீக் தொடரில் நரேந்தர் விளையாடிய 9 போட்டிகளில் 99 புள்ளிகளை பெற்று, அதிக ரைட் பாயிண்ட்ஸ் எடுத்தவர்களின் பட்டியலில் 3 வது இடத்தை பிடித்துள்ளார்.
T20 WC 2022: இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைய இந்த 2 வழி மட்டும் தான்…, முழு விவரங்கள் உள்ளே!!
பெங்கால் பெங்கால் வாரியர்ஸின் மனிந்தர் சிங் 83 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில், தபாங் டெல்லியின் நவீன் குமார் 126, பெங்களூரு புல்ஸின் பாரத் 112 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர்.