லடாக்கில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு..!

0
Soldier Palani

சீன ராணுவத்தினர் தாக்குதலில் லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

ராணுவ வீரர் மரணம்:

இந்தியா – சீனா ராணுவ படைகள் பேச்சுவார்த்தைக்கு பின்பு லடாக் எல்லையில் இருந்து பின்வாங்கத் தொடங்கின. அப்பொழுது கல்வான் பள்ளத்தாக்கு அருகே சீன படைகள் வன்முறையில் ஈடுபட்டதால் மோதல் வெடித்துள்ளது. இதனால் இரு நாட்டு வீரர்களும் கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கி உள்ளனர். இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் (அதிகாரி உட்பட) வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

India China
India China

சென்னையில் முழு முடக்கம் – காவல்துறை ஆணையர் ஆலோசனை..!

வீரர்கள் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்திய வீரர்கள் தாக்குதலில் 5 சீன ராணுவத்தினரும் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவத்தில் உயிரிழந்தவர்களில் தமிழக வீரரும் ஒருவர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி எனும் ராணுவ வீரரும் வீரமரணம் அடைந்து உள்ளார். இதற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.  அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதையை செலுத்த அம்மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here