விதவிதமான கவர்ச்சி உடையில் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – இணையத்தில் வைரல்!!

0
yashika anand
yashika anand

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான யாஷிகா தனது இணையதள பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளார். தற்போதும் விதவிதமான ஆடைகளுடன் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

யாஷிகா ஆனந்த்

மாடலிங் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். தனது பள்ளி பருவத்திலேயே திரையுலகில் கால் பதித்தவர். சிறு வயதிலேயே நடிப்பின் மீது இருந்த ஆசையால் தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வந்துள்ளார். அதன் பிறகு தான் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தில் ஒரு காட்சிகளில் மட்டும் நடித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் நடித்திருந்தார். ஆனாலும் அவருக்கு திரையுலகில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன் பிறகு அவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தில் நடித்தார். யாஷிகாவிற்கு நினைத்ததை விட அதிக பிரபலம் கிடைத்தது.

தொடர்ந்து பல வரவேற்புகளும் கிடைத்தது. ஆனாலும் சில எதிர்ப்புகளும் கிளம்ப தான் செய்தது. எதையுமே யாஷிகா ஆனந்த் காதில் வாங்கவும் இல்லை. அடுத்ததாக தான் அவருக்கு பிக் பாஸ் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை யாஷிகா சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

குக் வித் கோமாளி பிரபலத்தின் வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் புகைப்படம்!!

இந்த சிறு வயதிலேயே அவருக்கு இருந்த பக்குவம் அனைவரையும் வியக்க வைத்தது. தனது கேமை திறமையாக விளையாடினார் யாஷிகா. வீட்டை விட்டு வெளியேறும்போது ரூ.5 லட்சம் பணத்தை பரிசாக பெற்று சென்றார். அதன் பிறகு ஜாம்பி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அந்த படமும் ஓடவில்லை. தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வந்தார். சன்டிவியில் பிரபல சீரியலான ரோஜாவில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஒருவேளை சின்னத்திரையில் களமிறங்கி விட்டாரோ என்று கூட வதந்திகள் கிளம்பின. அதன் பின்பு ‘கழுகு 2’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

இப்படி குட்டிக்கரணம் போட்டு எப்படியோ தற்போது நிறைய படவாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார். தமிழில் 4 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். ஆனாலும் அவர் இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக தான் இருந்து வருகிறார். தற்போது துபையில் இருக்கும் யாஷிகா கலர் கலரான உடையில் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here