பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?? ஆன்மீக விளக்கம்!!

0

பெண்களுக்கான அழகுகளில் ஓன்று அவர்கள் இரண்டு புருவங்களுக்கு இடையே அணியும் குங்குமம். குங்குமம் வைப்பதில் கூட இவ்வளவு நன்மைகளா?? என்று வியந்து பார்க்கும் அளவிற்கு பல நன்மைகள் இருக்கிறது. சுத்தமான தாழம்பூ குங்குமம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இன்று பல இரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. குங்குமம் வைப்பதால் ஏற்படும் நண்மைகளை பற்றி பார்க்கலாம்.

பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

பெண்களுக்கு மிகவும் அழகானது நெற்றியில் வைக்கும் குங்குமம். குங்குமம் வைப்பது அழகிற்காக மட்டுமல்ல பல நன்மைகளும் இருக்கிறது. நாகரீக என்று இன்று பல பெண்கள் நெற்றியில் பொட்டே வைப்பது இல்லை. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும், உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் மஹாலட்சுமி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, குங்குமம் வைப்பது மிக சிறந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்று சில பெண்கள் பொட்டு எதற்காக வைக்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டு கலர் கலராக ஸ்டிக்கர் பொட்டுகளை வைக்கிறார்கள். குறைந்தது அதையாவது வைக்கிறார்களே என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நெற்றியில் குங்குமம் வைக்கும் போது தீய சக்திகள் விலகும் என்று கூறப்படுகிறது.

அதிலும், இரு புருவங்களுக்கு இடையில் குங்குமம் வைத்தால் அவர்களை யாரும் எளிதில் வசியம் செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினி பொருட்கள் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு, தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் நெற்றியில் வைக்கும் பொழுது உடலிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குங்குமத்தின் மேல் சூரிய ஒளிபடும்பொழுது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை கொடுக்கிறது. அதுபோல, மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் ஆரோக்கியத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது மிக சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here