குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

0
Madurai high court
Madurai high court

தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ்வழியியல் தொலைதூரக்கல்வி பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. முறையான இட ஒதுக்கீடு இல்லாத காரணத்தினால் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குரூப் 1 தேர்வு நடைமுறை:

சக்தி ராவ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், டிஎன்பிஎஸ்சி சார்பில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி 181 பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடைபெற்றது. அதற்கு நான் விண்ணப்பித்து முதல்நிலைத் தேர்வு அதாவது எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தேன்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சட்டப்படி தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதற்கு நான் தகுதியாக இருந்தும் எனக்கு அது கொடுக்கப்படவில்லை. இது குறித்து நான் விசாரித்து பார்த்தேன். அதில், தமிழ்வழியில் தொலைதூரக்கல்வி கற்றவர்களுக்கு மட்டும் தான் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. எல்லா ஆண்டும் 20% இட ஒதுக்கீடு தமிழ் வழியில் தொலைதூரக்கக்கல்விக்கு மட்டும் தான் கிடைக்கிறது. இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடக்க தடை செய்ய வேண்டும் எண்டு சக்தி ராவ் கூறினார்.

tnpsc 2020 group 1

நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரணை செய்தார். தமிழ் வழியில் தொலைதூரக்கல்வியை சேர்ந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் போன்ற அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் மற்றும் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here