உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் !!

0
உலகின் மிக உயரமான ரயில் பாலம் இந்தியாவில்!!

இந்தியாவில் மிக உயரமான ரயில்வே பாலத்தை டிசம்பர் – 2021க்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் செனாப் நதியின் குறுக்கே ரயில்வே பாலம் காட்டும் பணிகள் ரூ. 1110 கோடி செலவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஈபிள் டவரை விட உயரம் !!

இந்த பாலமானது 1.3 கிலோமீட்டர் தூரத்திற்கு 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படவுள்ளது. இது ஈபிள் டவரின் உயரமான 324 மீட்டரை விட அதிகமாகும். ஏற்கனவே சீனாவில் 275 மீ. உயரம் கொண்ட ஷிபாய் ரயில்வே பாலமே உலகின் உயரமான ரயில்வே பாலமாக கருதப்படுகிறது.

இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு பெரிய சாதனை !!

இப்பணிகள் குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் இப்பாலம் கட்டும் பணிகளை வரும் டிசம்பர் 2021க்குள் முடிக்க திட்டமிட்டுளோம். மேலும் இப்பாலம் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டால் 150 வருட கால இந்திய ரயில்வே வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here