10,349 விவசாயிகள் தற்கொலை – என்சிஆர்பி 2018 ம் ஆண்டிற்கான அறிக்கை

0
Farmers Suicide 2018

கடந்த 2018ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை என்சிஆர்பி (தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம்) வெளியிட்டுள்ளது. இதில் 2018ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,34,516 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 10,349 பேர் அதாவது 7.7 சதவீதம் பேர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

2017ஐ விட அதிகம்

2017ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 1,29,887 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 10,655 பேர் விவசாயம் சார்ந்த பணியாளர்கள் ஆவர். 2018ம் ஆண்டில் இதை விட அதிகமான தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

விவசாயிகள் தற்கொலை நிகழாத மாநிலங்கள்

பீகார், கோவா, மேற்கு வங்கம், உத்தரகாண்ட், டாமன் டையூ, டெல்லி, சண்டிகர், லட்சத்தீவு, புதுச்சேரி, ஒடிசா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயம் சார்ந்த தொழில் செய்யும் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here